அசிங்கப்படுத்திய எம்எஸ்வி… காத்திருந்து 10 வருடங்கள் கழித்து பழிவாங்கிய சந்திரபாபு… வெளியான ரகசியம்!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 6:35 pm

தமிழ் சினிமா வரலாறுகளில் பெரிதும் கொண்டாடப்பட்ட படங்களில் எம்ஜிஆர், டி.ஆர் ராஜகுமாரி, ராஜ சுலோச்சனா, ஜி வரலட்சிமி, சந்திர பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த குலேபகாவலி-யும் ஒன்று. 1955ஆம் ஆண்டில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இருவரும் இசைமைத்தனர். இப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் என்றால் அது ஜக்கி பாடிய “நா சொக்காப் போட்ட நவாபு” என்ற பாடல். இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடலின் போது, 10 ஆண்டுகளுக்கு பிறகு எம்எஸ்வி சந்திரபாபுவால் பழிவாங்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸில் எஸ்.என் சுப்பையா நாயுடுவிடம் எம்எஸ் விஸ்வநாதன் உதவியாளராக இருந்தார்.

Courtesy : SEPL

எம்.எஸ்.வி, எம்.எஸ் நாயுடுவிடம் உதவியாளராக இருக்கும் போது ஒரு இளைஞரை அழைத்து வந்து இவர் பாடுவேன் என்கிறான், இவனது குரலை பரிசோதித்து கூறு என சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்டு, எம்.எஸ்.வியும் அவரை பாடச்சொல்லி கேட்டிருக்கிறார். பின்னர் எம்.எஸ். நாயுடு வந்ததும் இவர் நன்றாக பாடுகிறாரா? என கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த எம்எஸ்வி, “எங்கே பாடுகிறான், வசனத்தை அப்படியே சொல்கிறான்,” என்று கூறியுள்ளார். இதனால் அந்த இளைஞன் வெளியேறும் போது எம்.எஸ்.வியை முறைத்தபடியே சென்றிருக்கிறார். அந்த இளைஞன் வேறு யாரும் இல்லை, நடிகர் சந்திரபாபு.

பின்னர் காலங்கள் மாற, எம்.எஸ்.வி பிரபல இசையமைப்பாளராகவும், சந்திர பாபு பிரபலமான நடிகராகவும் உருவெடுத்து விட்டனர். இந்த நிலையில் தான் சந்திரபாபு குலேபகாவலி படத்துடன் சேர்ந்து நடிக்கிறார். அப்போது, “நா சொக்கா போட்ட நவாபு” பாடலுக்கு டியூன் போட்டு எம்.எஸ்.வி நடிகர் சந்திரபாபுவிடம் எப்படி இருக்கிறது என கேட்க, அவர் இதெல்லாம் ஒரு டியூனா? இதற்கு எப்படி ஆடுவது என கூறியுள்ளார்.

இதற்கடுத்து எம்.எஸ் வி ஆடிக்காட்ட குஷியான சந்திரபாபுவும் எம்.எஸ் விஸ்வநாதனும் நன்பர்களாக மாறி விடுகின்றனர். இந்த தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!