சிவகார்த்திகேயன் படத்துல நடிக்க வேண்டாம்ன்னு சொன்னாங்க.. பிரபல தமிழ் நடிகை Open Talk
Author: Udayachandran RadhaKrishnan22 January 2023, 11:00 am
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது விடாது கடின உழைப்பின் மூலம் இந்த ஒரு நிலைக்கு வந்த இவர், மெரினா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பல வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டின் டாப் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிக சுமாரான விமர்சனத்தையே பெற்றது. இதையடுத்து சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தமிழ் நடிகை ஒருவரை இவரது படத்தில் நடிக்க வேண்டாம் என சிலர் அட்வைஸ் செய்தது குறித்து தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ், விஜய்சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், “நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்க வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். இது போன்று சினிமாவில் நடித்தால் அக்கா, தங்கச்சி ரோல்களில் மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்றெல்லாம் சொன்னார்கள் . இருப்பினும் அந்த கதை அம்சம் எனக்கு பிடித்திருந்ததால் நான் நடித்தேன்” என கூறியுள்ளார்.