“நடிச்சது 2 சீன்.. அதுக்கு ஏன் இவ்ளோ சீன்” கேலி செய்தவர்களுக்கு அமீர் – பாவனி கொடுத்த பதிலடி.

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 7:00 pm

போனி கபூர் – எச்.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் துணிவு. கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

thunivu---updatenews360

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து படக்குழுவில் உள்ள பலர் பிரபல செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அந்த வகையில், துணிவு படத்தில் நடித்த அமீர் மற்றும் பாவனி இருவரும் சில ஊடக பேட்டியில் பங்கேற்று, அதில் தாங்கள் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

amir pavni - updatenews36y0

அந்த பேட்டி சோசியல் மீடியாவில் பயங்கர வைரலானது. துணிவு படத்தில் பாவனி மற்றும் அமீர் இருவரும் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தனர். இதனால், படம் வெளியானதில் இருந்து பலரும் “நீங்க படத்தில் வந்ததே இரண்டு நிமிடம் தான். அதற்கு எதுக்கு ஓவர் பில்டப்”, என்று இருவரையும் கேலி செய்யும் வகையில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில், அந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் கூறியுள்ளதாவது, “அஜித் அவர்களுடன் நடிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் என்ன படம், என்ன கதை, என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்கவில்லை. படத்தில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதை விட அஜித் எங்களுடன் படத்திற்கு பிறகு மூன்று மணிநேரம் எங்களுக்கு அறிவுரை கூறினார். அதைத்தான் பெரிய விஷயம் தான் என்று நினைக்கிறோம்”, என்று நெட்டிசன்களின் கேலிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 511

    1

    0