‘எதை திருடனும்னு விவஸ்தை இல்லயா?’ – மேடையில் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட பயில்வான்

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 6:00 pm

தமிழ் சினிமாவில் பத்திரிக்கையாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பிரபல நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர் – நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை அவ்வப்போது ஏடாகூடமாக பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பயில்வான், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற பேச்சு எழ விஜய் தான் காரணம் என்று படுமோசமாக திட்டி பேசியிருக்கிறார்.

bayilvan-ranganathan-updatenews360-4

விஜய் ரசிகர்களும் ஆதரவாளர்களும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லி வருகிறார்கள். இதை பற்றி கேள்விப்பட்டு சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அவ்வப்போது கொதித்தெழுந்து வருகின்றனர். எப்போதும் அடுத்த நடிகர் திலகம், அடுத்த மக்கள் திலகம், அடுத்த உலகநாயகன் என்று அடுத்த இடத்தினை பிடிப்பவர்கள் யார் என்று சொல்லிக்கொள்வதில்லை. அப்படித்தான் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டமும்.

Vijay - Updatenews360

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். ரஜினிகாந்த் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் போதே அவரின் பட்டத்தை திருடனும் என்கிற திருட்டு நடந்து வருகிறது. எத திருடனும்கிற விவஸ்தை இல்லையா என்று படுமோசமாக பயில்வான் ரங்கநாதன் திட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை உருவாக காரணம் விஜய் தான். அடுத்த சூப்பர் ஸ்டார் தான் இல்லை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று மேடையிலோ ஸ்டேட்மெண்ட் வாயிலாகவோ விஜய் கூறியிருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது.

என்னதான் விஜய் கோடியில் மார்க்கெட் வைத்திருந்தாலும் ஹிட் கொடுத்தாலும் ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்று கூறுவதை விட்டுவிட்டு இதுபற்று வாய்த்திறக்காமல் இருப்பது தான் காரணம் என்று மேடையில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 764

    4

    4