விஜய்யின் மகளாக நடிக்கும் பிரபலம் : தளபதி 67 படம் குறித்து வெளியான புதிய அப்டேட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2023, 9:35 am

விஜய்யின் வாரிசு படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வாரிசு படம் வசூலில் மிரட்டி வருகிறது. படம் வெளியான ஒரே வாரத்தில் 210 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் ஈட்டியுள்ளது.

வாரிசை தொடர்ந்து தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப்படத்தின் மூலம் விஜய் இணைந்துள்ளார். படத்தில் விஜய் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாக, படத்தில் மிஷ்கின் உள்ளிட்ட 6 பேர் விஜய்யுடன் வில்லனாக மோதவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் துவங்கியுள்ளதாகவும் இந்த சூட்டிங்கில் மிஷ்கின் மற்றும் சாண்டி இடம் பெற்றுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியான இன்னொரு தகவல், கேங்ஸ்டராக நடிக்கும் விஜய்க்கு மகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம் ஜனனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைவாசியான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது அழகான சிங்கள தமிழ், ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

  • Suriya Act in Luck Bashkar Directors Next Movieலக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
  • Views: - 707

    4

    0