ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் உதவி இயக்குநர்: “THE BIGGEST CULPRIT” என சாந்தனு டுவிட்..!

Author: Vignesh
24 January 2023, 1:00 pm

வேலை செய்து கொண்டிருக்கும் போது இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

shanthanu - updatenews360

இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர் என்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் நடிகர் சாந்தனு தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

shanthanu - updatenews360

மேலும், வாழ்க்கை நிலையில்லாத ஒன்று என்றும் கடைசி நேரத்தில் இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா எனக்கு போன் பண்ணியும் என்னால் எடுக்க முடியவில்லை என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

shanthanu - updatenews360

இளம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணாவுக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது என்றும் அவர் தனது உயிர் நண்பர் என்றும் சாந்தனு பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் மன வேதனையையும் ரசிகர்கள் மத்தியில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தேவையில்லாத ஹேட்ரட்களையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என சாந்தனு கேட்டுக் கொண்டார்.

shanthanu - updatenews360

மன அழுத்தம் தான் காரணம் இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான். அதனால் தான் அந்த இளம் இயக்குநர் உயிரிழந்துள்ளார் என சாந்தனு கூறியுள்ளார்.

shanthanu - updatenews360

ஈகோ மற்றும் நெகட்டிவிட்டியை தூக்கி எறியுங்கள் நண்பர்களே என்றும் சாந்தனு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இராவணக் கோட்டம் படத்தில் நடிகர் சாந்தனு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 484

    0

    0