மார்பக கட்டியால் உருவான பயம்..! ஆபரேஷன் செய்த பின் பதறி போன ‘பாண்டியன் ஸ்டோர்’ நடிகை..! (வீடியோ)

Author: Vignesh
24 January 2023, 3:00 pm

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.

hema - updatenews360

இந்நிலையில், ட்விட்டர், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ஹேமா, சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடித்து வருகிறார். அதில், கடந்த ஆண்டு மார்பகத்தில் கட்டி இருந்ததால், அதை ஆப்ரேஷன் மூலம் அகற்றிவிட்டேன் என்றும், ஆனால், மாதம் தோறும் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்ததாகவும்.

Pandian Stores Hema -Updatenews360

கடந்த சில மாதமாக வேலை பளு காரணமாக பரிசோதனைக்கு என்னால் செல்ல முடியவில்லை என்றும், இதனால், திடீரென மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டதால், மிகவும் பதறிப்போனேன் எனவும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு, இது ஹார்மோன் சேஞ் காரணமாகவே வரும் வலிதான் என்று கூறிய பிறகு தான் உயிரே வந்தது என்றும், ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்வது நல்லது என விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வீடியோவை எடுத்ததாக ஹேமா ராஜ்சதிஷ் தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 741

    1

    0