‘போயி CHAIR எடுத்துட்டு வா டா’.. திமுக நிர்வாகி மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் : இதுதான் அவங்க இலட்சணம்… அண்ணாமலை விமர்சனம்!!
Author: Babu Lakshmanan24 January 2023, 6:17 pm
திமுக நிர்வாகியை கல்லால் அடித்த அமைச்சர் நாசரின் செயலை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மொழி போர் தியாகிகளை கவுரவிக்கும் விதமாக, திருவள்ளூரில் நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாகவும், ஒரு இருக்கை மட்டும் எடுத்து வந்துள்ளார்.
இதை கண்டதும் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார். இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போதை அமைச்சர் நாசரின் செயல் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், “இந்திய வரலாற்றில் எந்த ஒரு அமைச்சராவது மக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதுண்டா..?.
ஒழுக்கமின்மை, கண்ணியமின்மை, மக்களை அடிமைப் போல நடத்துவதுதான் திமுக,” எனக் குறிப்பிட்டுள்ளார்.