CWC Season 4: மீண்டும் வந்துட்டாங்க..! பாக்கியலட்சுமி சீரியல், பிக்பாஸ் பிரபலங்கள், அட அஜித்தின் தம்பியும் இருக்காராம்..!

Author: Vignesh
25 January 2023, 2:00 pm

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோ எப்போதோ வெளியாகிவிட்டது, இதில் கோமாளிகள் பற்றிய விவரம் தற்போது வெளியானது. சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், பாலா, குரேசி ஆகியோர் படங்களில் பிசியானதால் அவர்கள் இந்த சீசனில் கலந்துகொள்வது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

cook with comali - updatenews360

தற்போது போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் பாக்கிய லட்சுமி சீரியல் பிரபலம் விஷால், பிக்பாஸ் புகழ் ஷெரின், போன்றோர் இடம் பெற்றுள்ளனர். கோமாளியாக இத்தனை நாட்கள் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவாங்கி போன்றோர்கள் போட்டியாளர்களாக வருகிறார்களாம்.

cook with comali - updatenews360

இந்த சீசனுக்கான புரோமோவில் சிவாங்கியும் இடம்பெறவில்லை என்பதால் அவரும் கலந்துகொள்ளமாட்டார் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட்டாக அவர் இந்த சீசனில் குக் ஆக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும் இந்த சீசனில் குக் ஆக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 500

    0

    0