தனிமையில் தவிக்கும் நடிகை மீனா… வீட்டில் முடங்கி இருக்ககூடாது என எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 2:18 pm

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினி உள்ளிட்டவர்களுடன் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், நாயகியாகவும் ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவரது பல படங்கள் வெற்றியை தேடித் தந்துள்ளன.

தொடர்ந்து ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இஞ்சினீயரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன மீனாவிற்கு, நைனிகா என்ற மகளும் உள்ளார்.

இவர்கள் இருவரும் படங்களில் நடித்து வந்தனர். விஜய்யுடன் தெறி படத்தில் நடித்த நைனிகா தொடர்ந்து அரவிந்த் சாமியுடனும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நடித்திருந்தார்.

இதனிடையே மீனாவின் குடும்பத்தில் மிகப்பெரிய இடியாக அவரது கணவர் வித்யாசாகர், மல்ட்டி ஆர்கன் பெயிலியரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதையடுத்து திரையுலகமே ஒன்று திரண்டு மீனாவிற்கு ஆறுதல் கொடுத்தது. சில மாதங்கள் தன்னுடைய வீட்டிலேயே முடங்கிய மீனா, தற்போது தன்னுடைய துக்கத்திலிருந்து மீண்டு வருகிறார்.

தொடர்ந்து தனக்கு நெருக்கமானவர்களுடன் தன்னுடைய பொழுதை சிறப்பாக போக்கிவந்த மீனா, அவர்களின் பிறந்தநாள் உள்ளிட்டவற்றிற்கு ஆறுதல் கூறுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் மீனா.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் தன்னுடைய சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையொட்டி அதிகமான செல்ஃபிக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் சிறப்பான கொண்டாட்டமாக செல்ஃபிக்களுடன் துவங்கியுள்ளதாக அவர் இந்தப் புகைப்படங்களின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். மிகவும் கலர்புல்லான புகைப்படங்களை அவர் இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார். தான் எப்போதும் செல்ஃபி புள்ள என்றும் அவர் கூறியுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!