அமீர்-பாவ்னிக்கு இந்த தேதியில் டும் டும் டும்..! உண்மையை உடைத்த பிக்பாஸ் காதல் ஜோடி..!

Author: Vignesh
25 January 2023, 5:00 pm

பிரபல தொலைக்காட்சி சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே, பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்ந்து தற்போது ரியல் ஜோடிகளாக மாறப்போகும் அமீர்-பாவ்னியின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளி வந்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்து அமீரின் காதலை ஏற்க தயக்கம் காட்டிய பாவ்னி, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் காதலை ஏற்றுக்கொண்டு அமீருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

pavni amir-updatenews360

அதன்பின் சில ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த காதல் ஜோடி நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் அதே காதல் ஜோடிகளாக நடித்தனர். துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் தங்களின் காதல் மேட்டர் தெரிந்து அஜித் என்ன தெரிவித்தார் என்பதையும் ஓப்பனாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அமீர்-பாவ்னி அளித்த பேட்டியொன்றில் இருவருக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவ்னி, அப்படியொன்றும் இல்லை நான் சும்மா அந்த தேதி அப்டேட்டை கூறினேன் என தெரிவித்தார்.

amir pavani - updatenews360.png 3

திருமணம் இருக்கிறது ஆனால் இப்போது இல்லை எனவும், சினிமாவில் நடிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறோம் என்று அமீர் தெரிவித்தார்.

  • Viduthalai 2 Making Video ஒரு கிராமத்தை உருவாக்கிய வெற்றிமாறன்…விடுதலை 2 மேக்கிங் வீடியோ ரிலீஸ்….!
  • Views: - 737

    1

    1