வேணாம் என்று வடிவேலு தூக்கி வீசிய கதையில் நடிகர் விஜய் : இது நம்ம லிஸ்டுலயே இல்லயேப்பா.!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 4:39 pm

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் அவர்களுக்கு பின் பெரிய காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு.

90களில் ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்து வந்த வடிவேலு சில படங்களை சில சூழ்நிலையாலும் தனக்கு செட்டாக இருக்காது என்று நினைத்து ஒதுக்கியும் இருக்கிறார்.

அப்படி வடிவேலு ஒதுக்கிய படத்தில் நடிகர் விஜய் நடித்து தற்போது தளபதியாகவும் 100 கோடி வாங்கும் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

அந்தவகையில் 1999ல் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி விஜய் நடிப்பில் 150 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.

இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் காமெடியை மையமாக வைத்து வடிவேலுவை தான் முதல் நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குனர் எழில்.

ஆனால் வடிவேலு, ஹீரோவாக நடித்தால் தன்னுடைய மார்க்கெட் இறங்கிவிடும் என்று நினைத்து அப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

1931ல் ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்லின் நடிப்பில் வெளியான சிட்டி லைட்ஸ் என்ற படத்தினை கதையம்சமான உருவான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வைகைபுயலுக்கு பின் மறைந்த நடிகர் முரளியிடம் கூறிய எழில், ருக்குமணி என்ற பெயரில் எடுக்கவிருந்தாராம்.

ஆனால் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி வேண்டாம் என்று கூற தளபதி விஜய்யை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் படமாக மாற்றியமைந்துள்ளது. இப்படம் விஜய்யின் கேரியர் வாழ்க்கையை அப்படியே மாற்றியமைத்தது தான் நிசப்தமான உண்மை.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?