‘வடிகட்டுன முட்டாள்’… திரைப்பட விமர்சகர் பிரசாந்த்தை வெளுத்து வாங்கிய பிரபல பாடகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 8:02 pm

ஒரு காலத்தில் ஒரு படம் எப்படி உள்ளது என்பதை டிவியில் ஒளிப்பரப்பாகும் விமர்சனங்களை வைத்தே மக்கள் திரையரங்குக்கு சென்று வருவார்கள்.

ஆனால் இன்றைய காலத்தில் ஏராளமானோர், யூடியூப்பில் ஒரு படம் வெளியான பின் விமர்சிக்கின்றனர். அதுவும், விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். தங்கள் யூடியூப் சேனலுக்கு அதிக பயனாளர்கள் வரவேண்டும் என்பதற்காக சில படங்களை தாறுமாறாக விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமா ரிவீயூ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் சினிமா விமர்சகர் பிரசாந்த், நடிகர் சூர்யா நடிப்பில் 2016ல் வெளியான 24 என்ற படத்தை அப்போது விமர்சித்திருந்தார்.

அதில், படத்தின் நெகட்டிவ் இதுதான் என, 24 படத்தின் பாடல்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அழகியே அரக்கியே என்ற பாடலை யே யே என்று தான் போகுது, பாடலில் ஒண்ணும் இல்லை, மக்களுக்கு புரியவில்லை, இந்த பாடல்கள் படத்தின் கதையோட்டத்தை பாதிக்ப்பட வைத்துள்ளது என விமர்சித்திருந்தார்.

ட்விட்டர், பேஸ்புக்குகளில் இந்த வீடியோ வெளியாகி நெட்டிசன்களில் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், தற்போது மீண்டும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் ஒருவர், எப்போது பிரசாந்த் இந்த படத்துக்கு விமர்சனம் செய்தாரோ, அதில் இருந்து அவரது விமர்சனத்தை நான் பார்பதே இல்லை என பதிவிட்டிருந்தார்.

அதை டேக் செய்த பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ், திரைப்படங்களைத் தரமான முறையில் விமர்சனம் செய்யும் திறன் அவருக்கு உள்ளதா என்பது தெரியாது ஆனால் இசை பற்றி அவர் ஒன்றும் தெரியாத வடிகட்டுன முட்டாள் என்பது நன்றாகவே தெரிகிறது என விமர்சித்துள்ளார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!