தூங்கிக் கொண்டிருந்த கணவன் – மனைவி : வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… கத்தியைக் காட்டி செய்த கொடூரம்!!

Author: Babu Lakshmanan
26 January 2023, 11:08 am

திருவள்ளூர் அருகே வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம், 6 1/2 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நெடு வரம் பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (70). இவரது மனைவி மகேஸ்வரி (68). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். விஜயன் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, திறந்திருந்த வீட்டுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து மகேஸ்வரி கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி பீரோவில் இருந்த நகைகளை எடுக்கச் சொல்லியுள்ளனர்.

இதைப் பார்த்த கணவர் விஜயனை மூன்று நபர்கள் தலையில் கட்டையால் தாக்கி விட்டு, தாலி சரடு, இரண்டு நெக்லஸ் உள்ளிட்ட 6/12 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பீரோவில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்தசோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட விஜயனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கூலி தொழிலாளியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 388

    0

    0