இணையத்தில் வெளியான நடிகர் பார்த்திபனின் மரண செய்தி: வைரலாகும் நடிகரின் பதிவு..!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 12:00 pm

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் பார்த்திபன். 70 திரைப்படங்களுக்கு மேல் முக்கிய கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள பார்த்திபனின் வித்தியாசமான இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இரவின் நிழல்.

parthiban - updatenews360

தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் நடித்து வரும் இவர் 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்னும் தலைப்பில் தனது அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார். இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், நடிகர் பார்த்திபன் திடீரென உயிரிழந்ததாக அதிர்ச்சி அளிக்கும் வதந்தியை ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பரப்பியுள்ளனர். இது குறித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில், நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! என பதிவு செய்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!