குடியரசு தினத்தன்று விற்கக் கூடாது-னு யார் சொன்னா..? அமைச்சரின் சொந்த ஊரிலேயே சட்டவிரோத மதுவிற்பனை… வீடியோ எடுத்தவரை மிரட்டிய திமுக நிர்வாகி

Author: Babu Lakshmanan
26 January 2023, 5:50 pm

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை வீடியோ எடுத்தவரை விரட்டிய திமுக நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடப்படும் வரும் நிலையில், தமிழக அரசு குடியரசு தினத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா அருகே உள்ள தென்னிலை பகுதியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, மது துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த தொகுதியிலேயே சட்ட விரோதமாக மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதை அப்பகுதி சார்ந்த ஒருவர் வீடியோ எடுக்கும் போது, எல்லா பகுதிகளிலும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை நீங்கள் எடுங்கள் என்று கூறினார்.

அப்போது திமுக கரை வேட்டி கட்டிய ஒருவர், வீடியோ எடுக்க கூடாது என்று எங்களை மீறி நீங்கள் என்ன செய்து விடுவீர்கள் என்று வீடியோ எடுத்த நபரை தாக்குவதற்கு வந்துள்ளார். தற்போது மது விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 542

    0

    0