தமிழக தொழிலாளர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் மோதல் : திருப்பூரில் அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 6:50 pm

மது போதையில் தகராறு செய்த தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்தி துரத்தி தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில் பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் டீ இடைவேளைக்கு மாலை வெளியே வந்துள்ளனர்.

அருகே இருந்த பெட்டி கடையில் சிகரெட் புகைத்துள்ளனர், அப்போது அங்கு மது போதையில் இருந்த தமிழக இளைஞர்கள் 4 பேர் வந்துள்ளனர்.

வடமாநில இளைஞர் தன் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வடமாநில தொழிலாளியை 4 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதனை கண்ட வடமாநில தொழிலாளர்கள் 4 தமிழக இளைஞர்களையும் துரத்தி துரத்தி அடித்துள்ளனர். அந்த வழியாக 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வந்த நிலையில் தமிழக இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

அதே போல் வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி சென்றுள்ளனர். யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

https://vimeo.com/792970934


இந்நிலையில் தகராறு நடைபெற்றதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!