உதயநிதி முன்பே திமுக தொண்டரை தலையில் தாக்கிய அமைச்சர் கேஎன் நேரு… அடுத்தடுத்த சர்ச்சைகளால் திணறும் திமுக அரசு..!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 11:27 am

திமுக நிர்வாகி மீது அமைச்சர் நாசர் கல்லை வீசி தாக்கிய சம்பவம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள், அமைச்சர் கேஎன் நேரு திமுக தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அதாவது, பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத்தை ஓசி பயணம் எனக்கூறி அமைச்சர் பொன்முடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தாக்கியதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

அவரைத் தொடர்ந்து, திமுக எம்பி ஆ.ராசா மனுஸ்ருதி தொடர்பான சர்ச்சை பேச்சும் எதிர்கட்சிகளுக்கு நல்ல தீணியாக அமைந்தது. இதேபோல, அமைச்சர் கேஎன் நேரு,மற்றொரு அமைச்சரான கே.என்.நேருவோ திருச்சியில் நடைபெற்ற விழாவில் நீர் நிரம்பிய குடங்களை வேகமாக எடுத்துக் கொடுக்காததால் திமுக கவுன்சிலரின் பின்னந்தலையில் கையால் தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று முதல்வர் ஸ்டாலின் புலம்பினார்.

CM Stalin - Updatenews360

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்குப் பிறகும் அமைச்சர்கள் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டபாடில்லை. அண்மையில், அமைச்சர் நாசர், திமுக நிர்வாகி ஒருவரை கல்லை வீசி தாக்கிய சம்பவம் மக்களிடம் கண்டனங்களை எழச் செய்தது.

இது தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் கேஎன் நேரு திமுக தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் திமுகவை மென்மேலும் நெருக்கடிக்கு ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உதயநிதிக்கு நேற்று இரவு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் மேளதாளத்துடன் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயம் தொண்டர் ஒருவர் உதயநிதிக்கு சால்வை அணிவிக்க முயன்றார். இதனை அருகில் இருந்து கவனித்த அமைச்சர் கேஎன் நேரு, அவரை தலையில் அடித்து வெளியேற்றினார்.

இதே போல அங்கிருந்த தொண்டர்களை வேகமாக செல்லும் படி அதட்டியும் அடி கொடுத்தும் அனுப்பி வைத்தார். இதனை அங்கிருந்த பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகமணி மீடியாக்கள் வீடியோ எடுக்கிறாங்கனு நினைவுபடுத்தினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.

அடுத்தடுத்த அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் என்பதே நிதர்சனம்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…