“உன்ன அடிச்சா எனக்கு தான் அசிங்கம்”.. பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்..! (வீடியோ)

Author: Vignesh
28 January 2023, 4:30 pm

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி ரெட்டி

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மூன்றாவதாக இடம் பிடித்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்ற விக்ரமன் பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அறம் வெல்லும் என்ற ஒற்றை சொல்லை வைத்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருந்தார்.

azeem vikraman - updatenews360 2

இதனிடையே, என்ன தான் விக்ரமன் இப்பொழுது அரசியலில் இருந்தாலும் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்தவர் தான். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலிலும் அவரது உண்மை குணத்திற்கு ஏற்றவாறு தான் கதைக்களம் அமைந்திருந்தது.

அந்த சீரியலில் பயங்கர வில்லியாக நடித்து வந்தவர் தான் பிக்பாஸ் பாவனி. இந்த சீரியலில் இடம்பெற்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெரியவர் காபி கொடுக்க வர அப்பொழுது அந்த காபி பாவனியின் காலில் சிந்தி விட அதனை துடைக்க சொல்லி அந்த பெரியவர் மீது பாவ்னி கோபப்படுகிறார்.

emi - updatenews360

அப்பொழுது வரும் விக்ரமன் உன் அப்பா வயசு இருக்க மனுஷனை ஷூ துடைக்க சொல்ற என்று அறைய போன நிலையில், உன் அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோ இப்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் இப்படி நேர்மை குணமுடையவரு தான் என்று கமெண்ட் செய்து உள்ளனர்.

  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!