திருமணத்திற்கு பின் மார்க்கெட் இழந்த பிரபல நடிகை: லைக்காவிடம் கணவருக்காக காலில் விழாத குறையாக கெஞ்சியும் மனசு இறங்கலையே..!
Author: Vignesh30 January 2023, 11:30 am
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி எனவும் சொல்லப்பட்டது.
AK 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம், அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கதையை படித்துவிட்டு இதை மாற்று, அதை மாற்று என சொல்லி அஜித் சொல்லுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திடீரென இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து லைக்கா விக்னேஷ் சிவனை தூக்கி விட்டதாக, செய்தி வெளிவந்தது. இதைக் கேள்விப்பட்ட நயன்தாதரா, லைக்காவுக்கு போன் செய்து தயவு செஞ்சு இந்த படத்தில் இருந்து விக்கியை தூக்க வேண்டாம் எனவும், அவரது கெரியரே முடிந்து போய்விடும் என காலில் விழாத குறையாக கெஞ்சியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், லைக்கா தன் முடிவில் இருந்து இறுதி வரை மாறவில்லை. ஏற்கனவே திருமணத்திற்கு பின் நயன், விக்கி-யின் மார்க்கெட் சரிந்ததாக சொல்லப்படும் நிலையில், தற்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டு இருப்பது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.