முதல்முறையாக குழந்தையை வெளியுலகுக்கு காட்டிய காஜல் அகர்வால் : திருப்பதியில் சூழ்ந்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 3:48 pm

ஏழுமலையான் கோவிலில் தனது குழந்தையுடன் நடிகை காஜல் அகர்வால் சுவாமி தரிசனம் செய்தார்.

பிரபல நடிகை காஜல் அகர்வால் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான் வழிபட்டார்.

கடந்த 2020 ஆண்டு நடிகர் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின் முதல் முறையாக திருப்பதி மலைக்கு வந்த அவர் மகனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

தொடர்ந்து அவருக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?