அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணா தான் வாய்ப்பா?.. அப்போ, நீ விளக்கு புடிச்சியா?.. நடிகைகளை மோசமாக பேசிய பயில்வானை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
31 January 2023, 10:30 am

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

kasthuri-shankar02 updatenews360

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, பயில்வான் விமர்சித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

kasthuri-shankar02 updatenews360

சினிமாவில் நடிகைகள் பெரிய ஆள் ஆக வேண்டும் என்றால், அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு பிக் பாஸ் பிரபலமான கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரி கூறியதாவது, நடிகைகள் குறித்து இப்படி பச்சையாக ஒருவன் பேசிக் கொண்டிருக்கிறான் என்றும், பேருக்கு பயில்வான், பலசாலி என்றெல்லாம் வைத்துக் கொள்கிறான் ஆனால் செய்யும் வேலை எல்லாம் இப்படி மட்டமாக தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

bayilvan-ranganathan-updatenews360-4

மேலும், நடிகைகள் இப்படி போயிருக்கிறார் என்று சொல்ல, ஒன்று அவர் அவர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வந்து விளக்கு படித்து பார்த்திருக்க வேண்டும் எனவும், இதில் எதை செய்தார் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என படு மட்டமாக விமர்சித்தார். கஸ்தூரி பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Kasthuri_Shankar-4-Updatenews360
  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!