எழில், அமிர்தா திருமணத்தை நடத்தி வைக்க போவது கோபியும் இல்ல பாக்கியாவும் இல்ல… இது நம்ம லிஸ்டுலயே இல்லயேப்பா!!

Author: Vignesh
31 January 2023, 3:30 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் ஏற்கனவே ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியல் இருந்து அதிரடியாக விலகினார். மேலும், ராதிகா கதாபாத்திரம் வில்லியாக காட்டப்படும் என்பதாலும் அப்படி நடிக்க விருப்பமில்லாமல் சீரியலை விட்டு விலக முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து, இந்த கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இதுவரை எத்தனையோ சீரியல்கள் இவர் நடித்திருந்தாலும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது ‘பாக்கியலட்சுமி’ தொடர் தான். இந்நிலையில், ரேஷ்மாவுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

reshma pasupuleti - updatenews360.jpg 2

ஆனால் இது குறித்து ரேஷ்மா எந்த ஒரு உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. விரைவில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதனால், ராதிகா கதாபாத்திரத்திற்கு, புதிய ராதிகாவாக நடிகை வனிதா விஜயகுமாரை நடிக்க வைக்க, சீரியல் குழு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது பரபரப்பாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எழில் தர்ஷினியை திருமணம் செய்தால் வரதட்சணையாக கிடைக்கும், பணத்தைக் கொண்டு வீட்டை மீட்டு விடலாம் என ஈஸ்வரி உள்ளிட்டோர் நினைக்கின்றனர். இதனால் எழிலும் வர்ஷினியை திருமணம் செய்ய தயாரான நிலையில், கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட் நடந்து அமிர்தா எழில் திருமணம் நடக்கிறது.

இதனால், பணம் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது, இந்த சிக்கலை தீர்த்து வைக்க, சீரியல் நடிகர் ஜீவா இத்தொடரில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், இவர் தற்போது திருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.

bhakiyalakshmi- updatenews360

இவர் பாக்யாவுக்கு பணம் தந்து உதவ சீரியலில், என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறி இது சார்ந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாக்யாவுக்கு பணம் கிடைக்காமல் தடுக்க ராதிகாவும் இந்த இடத்திற்கு வந்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது சீரியலின் அடுத்த ட்ராக் இதை வைத்து தான் நகரும் என சொல்லப்படுகிறது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1707

    12

    6