”அஜித்” படத்திலிருந்து விலகிய ”விஜய் பட நடிகை”.. : ஒரே நாளில் தெறித்து ஓடியதற்கு இதுதான் காரணமாம்..!

Author: Vignesh
31 January 2023, 5:30 pm

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

ஜனவரி 11-ம் தேதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை ‘துணிவு’ வசூலித்ததாக தகவல் வெளியாகியானது. தமிழ்நாட்டில் படம் அடுத்த சில நாட்களில் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக அளவில் படம் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

jayasudha-updatenews360

வாரிசு படத்தில், நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா நடித்திருப்பார். சிறப்பாக நடித்த ஜெயசுதா சமீபத்தில் பேட்டியொன்றில் பல விசயங்களை கூறியுள்ளார்.

இந்நிலையில் வலிமை படம் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அப்படத்தில் நடிகர் அஜித்திற்க்கு அம்மாவாக நடிகை சுமித்ரா நடித்திருப்பார்.

jayasudha-updatenews360

முதலில் நடிகை சுமித்ராவுக்கு பதில், வலிமை படத்தில் அஜித் அம்மாவாக தான் நடிக்க வேண்டியது என்றும் ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அப்படி நடித்தபோது கொரானா பாதிப்பால் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், வைரஸ் பாதிப்பின் பயம் காரணமாக வலிமை படத்தில் நடிக்க வேண்டாம் என்று விலகிவிட்டதாக நடிகை ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 645

    0

    1