பெண் முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை போட்டு ஊர் சுற்றி அழைத்து வந்த உறவினர்கள் : விசாரணையில் ஷாக் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 7:53 pm

மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் சந்த்வாத் நகரில் ஷிவ்ரே கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
அப்போது அவரது மனைவி பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்த தகவல் அறிந்து கிராமத்திற்கு வந்த அவர், தனது கணவர் தற்கொலை செய்யவில்லை என்றும் கணவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.

இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பெண்ணின் முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து, அந்த கிராமத்தில் ஊர்வலம் அழைத்து போயுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் விபத்தில் சிக்கியுள்ளார். கையில் காயமடைந்த அவரை காரில் கொண்டு போய் பெற்றோர் வீட்டில் கணவர் விட்டுள்ளார். இதன்பின் சில நாட்களில் கணவர் தற்கொலை என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
கணவரின் இறுதி சடங்கிற்கு கிராமத்திற்கு சென்று, சந்தேகம் எழுப்பிய அவரை உறவினர்கள் அடித்து உள்ளனர். அவரது குழந்தைகள், உறவினர்களையும் அடித்து, தாக்கி உள்ளனர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் உடனடியாக போலீசிடம் சென்று புகார் அளித்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…