மதுரை அருகே அரசியல் பிரமுகர் படுகொலை : அரிவாளால் கொடூரமாக தாக்கிய மர்மநபர்களுக்கு வலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2023, 10:07 am

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40) இவர் ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம்.கே புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் இந்து மக்கள் கட்சியில் தென்மாவட்ட துணை செயலாளராகவு செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு கடை அருகே சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஜெய்ஹிந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக படுகொலை நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 487

    0

    0