பந்தா காட்ட நினைத்து பல்ப் வாங்கிய இளைஞர்… வைரலாகும் வீடியோவால் எழுந்த சிரிப்பலை!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 1:52 pm

பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதையில் இருந்து இடும்பன் மலை செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நின்று கொண்டிருந்ததால், எதிரே வந்த கார் வழியை மறைத்தவாறு நின்றது.

அப்போது, கார் முன்பு முன்னாள் நிறுத்திவிட்டு பைக்கின் ஆக்சிலேட்டரை திருகிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்றிருந்த கார் மீது மோதி குப்புற விழுந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://player.vimeo.com/video/794781901?h=1d8edf5961&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

கார் ஓட்டுநரின் முன்பு பந்தா காட்ட நினைத்து வாரியடித்து விழுந்த இளைஞரின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?