“படத்த பத்தி மட்டும் கேள்வி கேளுங்க.. விஜய் பத்தி வேண்டாம்”.. :பத்திரிக்கையாளர் கேள்வியால் கோபமடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர்..!

Author: Vignesh
1 February 2023, 5:15 pm

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், S.A . சந்திரசேகர் இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் உருவாகி அன்று இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் இனியா, சரவணன், சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் S.A . சந்திரசேகர் நான் கடவுள் இல்லை படத்தின் ட்ரெய்லர் விழாவின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டார். S.A . சந்திரசேகரிடம் ட்ரைலரில் ஸ்டார் என்ற லோகோவிற்கு அருகில் விஜய் புகைப்படத்தை வைத்தது ஏன் எனவும், மேலும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் போய்க் கொண்டுள்ள நிலையில் நீங்கள் ஏன் இவ்வாறு போட்டு உள்ளீர்கள் என்றவாறு கேள்வி எழுப்பப்பட்டது.

SAChandrashekar_ActorVijay_updatenews360

அதற்கு S.A . சந்திரசேகர் ”படத்தைப் பத்தி மட்டும் கேள்வி கேளுங்கள் தேவையில்லாத வேற எந்த விவகாரத்தையும் பற்றியும் இங்கு பேச வேண்டாம் எனவும், இது என்னுடைய படம் அதனால் என் மகனின் புகைப்படத்தை இதில் போட்டுள்ளேன்”. இதனால் இந்த விஷயத்தை வேறு எந்த பிரச்சனையோடும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் என்றவாறு S.A சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 509

    2

    1