ஒட்டுத்துணியில்லாமல் உடலில் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம மனிதன் : ஷாக் சிசிடிவி!!
Author: Udayachandran RadhaKrishnan2 February 2023, 12:33 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன்.விவசாயம் செய்து தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இன்னிலையில் கடந்த 31ம் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். இவரது வீடு மற்றும் தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.
வீடு திரும்பி கேமராக்களை ஆய்வு செய்த பொழுது ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது விவசாய தோட்டத்தில் முகமூடி அணிந்து உடல் முழுதும் போர்வையால் போர்த்தியபடி மர்ம நபர் ஒருவர் வீடுகளை நோட்டமிட்டது பதிவாகி இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும்,கும்பலாக வந்தார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடுகளை நோட்டமிட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.