முதலமைச்சருக்கு பேனா பரிசாக கொடுத்த சிறுமி… தனது ஆசையை சொன்னவுடன் நெகிழந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
Author: Babu Lakshmanan2 February 2023, 1:51 pm
வேலூர் : முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வழியில் முதலமைச்சருக்கு சிறுமி பேனா வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவி S.யாழினி, முதலமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு முடித்து வெளியே வரும்போது, முதல்வருக்கு பேனா கொடுத்துள்ளார். வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்வர் பள்ளி மாணவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டுமென சிறுமி ஆசைபட்டுள்ளார். இதனைக் கேட்ட முதல்வர் சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் என கூறி அனுப்பியுள்ளார்.
இது குறித்து சிறுமி கூறுகையில், “முதல்வரை பார்த்தது எனக்கு சந்தோஷமா இருந்தது, என்னை நன்றாக படிக்கச்சொன்னார், நான் முதல்வரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை,” என கூறினார்.