“மார்பகத்தைப் பெரிதாக்க சொன்னார்” இயக்குநர் குறித்து பகீரங்கமாக உண்மையை போட்டுடைத்த சமீரா ரெட்டி..!

Author: Rajesh
2 February 2023, 4:30 pm

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இளசுகள் மனதில் நின்றவர் நடிகை சமீரா ரெட்டி. இதற்கு முதலே, ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர், தமிழில் அசல், நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Sameera-Reddy-updatenews360-1

அதன் பின் 2014ம் ஆண்டு, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். தற்போது, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை சமீரா ரெட்டி, அவர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் இவர் நடிக்காவிட்டாலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதற்கு நடுவே, தாயான பிறகு உடல் எடை கூடி ஆளே மாறி போனது குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட போது, அது குறித்து போல்ட்டாக பதிலளித்து வந்தார். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி தற்போது பாலிவுட்டின் மற்றொரு மோசமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மூக்கு, வாய் என நடிகைகள் தங்களுடைய அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிந்த நேரம் அது. அந்த சமயம் தான் நடிகை சமீராவும் திரைப்படத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

அப்போது, திரைப்பட ஆடிஷனில் கலந்து கொண்டபோது பாலிவுட் இயக்குநர் ஒருவர் சமீராவை மார்பை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு சமீரா மறுப்பு தெரிவித்து மாறாக, மார்பை பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்யாமல் வேறு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அவரை வலியுறுத்தியுள்ளனர். எவ்வளவுதான் சொல்லியும் கடவுள் அருளால் தான் அப்படி செய்யவில்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும் மார்பை பெரியதாக காட்ட தான் எடுத்த சிறு முயற்சிகளை கூட செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைப்பதாகவும் சமீரா கூறியுள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!