இதுக்கு அவரே பரவாயில்ல… விஷாலை ஒதுக்கிய லியோ படக்குழுவினர் ; வெளியான காரணம்…!!
Author: Babu Lakshmanan4 February 2023, 12:32 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் தளபதி 67. வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே இந்த கூட்டணி உறுதியாகிவிட்டதால், படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தளபதி 67 படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து பார்க்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தளபதி67 படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர், நடிகைகளின் விபரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. கடந்த ஜனவரி 2ம் தேதி படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. தற்போது லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் விஷாலை வில்லனாக நடக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதற்கு அவரும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் நடிகர் விஷால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு காரணம், அவர் நடித்த படங்களின் படப்பிடிப்புகளுக்கு சரியாக போவது இல்லை என்ற செய்திதான்.
இதேபோல் விஜய்யின் லியோ படத்திற்கு நடந்துவிடக்கூடாது என்பதற்காக விஷால் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம் படத்தின் தயாரிப்பாளர் லலித். இதனால் தான் விஷால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் என்று தகவல் வெளியாகி வருகின்றன.
இந்த காரணத்தை கேட்கும் நெட்டிசன்கள், விஷாலுக்கு சிம்புவே பரவாயில்லை போல் இருக்கு என்று சொல்லி கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.