லீக்கானது லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் : ட்விஸ்ட் வைத்த படக்குழு!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2023, 1:12 pm
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.
இதையடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இந்த கூட்டணி மாஸ் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் தளபதி 67வது படத்தின் கதாபாத்திரங்கள், டைட்டில் என அடுத்தடுத்து அப்டேட்டுகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு, ரசிகர்களை திணறடித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் நேற்று படத்தின் டைட்டில் லியோ என வெளியிடப்பட்டது.
அந்த டைட்டில் டீசர் வீடியோவும் வெளியாக பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் டைட்டில் டீசரில் பல ரகசியங்கள் ஒளிந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில், BLOODY SWEET என்ற வசனத்தை பேசும் விஜய், லியோ படத்தின் லோகோவில் கூட BLOODY மேலேயும் SWEET கீழேயும் இருக்கும்.
இதை வைத்து பார்க்கும் போது படத்தில் இரண்டு விஜய் உள்ளதாகவும், ஒருவர் சாக்லேட் தொழிலை பார்த்துவருவதாகவும், மற்றொருவர் வன்முறையில் காமிக்கும் விஜய்யாகவும், இது பழி வாங்கும் கதையாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்.