‘அந்த மாதிரி படத்துல வாய்ப்பு வந்தா கண்டிப்பா நடிப்பேன்’ – அம்மு அபிராமி Open Talk..!

Author: Rajesh
4 February 2023, 1:45 pm

எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இப்படத்திற்கு பிறகு ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். பிறகு, அசுரன், யானை உள்ளிட்ட திரைபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இவருக்கென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே உண்டாகி உள்ளது என்றே கூறலாம்.

ammu abhirami updatenews360

அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படமான ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், கண்ணகி, நிறங்கள் மூன்று, பெண்டுலம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மு அபிராமி, சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என கேள்வி கேட்டதற்கு, அதற்கு பதில் அளித்த அம்மு அபிராமி “எனக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசை. அந்த மாதிரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நாம் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களை சிரிக்க வைக்கும்படி அல்லது சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லி பேசும் பொருளான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும்” என்று நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?