கோவை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் : ஆட்சியராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2023, 2:18 pm
கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்பு.
கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றார். தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே பணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கோப்புகளை ஒப்படைத்தார்.தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது.நான் 2015 ஆம் ஆண்டின் ஐ.ஏ.எஸ் பேட்ஜ். நான் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பணி புரிந்துள்ளேன். இன்று கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொள்கிறேன்.
அரசின் திட்டங்கள் மற்றும் பயன்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க, மக்களின் குறைகளை தீர்க்கவும் அனைத்து துறைகளில் ஒருங்கிணைந்து அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
முதல்வர் அனைத்து துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்த அறிவுரை தெரிவித்துள்ளார். திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உள்ளார். இவ்வாறு பேசினார்.