வலி தாங்க முடியல.. படுகாயம் அடைந்த சுதா கொங்கரா : புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Rajesh
5 February 2023, 3:30 pm

திரைப்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால், 2002ம் ஆண்டு ஆங்கிலப் படமான ‘மித்ர், மை ஃபிரண்ட்’ படத்தின் மூலம் கதாசிரியராக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. பின்னர், இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் சுமார் 7 ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் இவர் இயக்கிய ‘துரோகி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

நல்ல வலுவான கதையை இயக்க நினைத்த சுதா, பாக்சிங் கதையை மையமாக வைத்து, நிஜ பாக்சரான ரித்திகா சிங் மற்றும் நடிகர் மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் இறுதி சுற்று என்னும் படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

பிரபல விமான நிறுவன தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, பல்வேறு தேசிய விருதுகளையும் குவித்தது. இதற்கு நடுவே, வெப் சீரீஸ் ஒன்றில் காளிதாஸ் ஜெயராமன் அவர்களின் வித்தியாசமான நடிப்பில் குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

தற்போது சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சுதா கொங்கரா கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில், அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விரைவில் ஒரு டாப் நடிகருடன் தமிழில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், சுதா கொங்கராவிற்கு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கையில் பெரிய கட்டுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கியுள்ளனர். விரைவில் அவர் குணமடைய வேண்டி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!