அந்த திமுக அமைச்சர் பச்சோந்தி.. அறுவருக்கத்தக்க வார்த்தையால் ஜெயலலிதாவே முகம் சுழித்தார் : செல்லூர் ராஜு விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 4:58 pm

மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு பேசும்போது,
அதிமுக ஆட்சிக்காலத்தில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது.

மன்னர் திருமலை நாயக்கருக்கு வெண்கல சிலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தல் அந்த நேரத்தில் வந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக திமுக அரசினர் நடத்தவில்லை. திமுக அமைச்சர் பெருமக்கள் அரசு விழாவிற்கு கலந்து கொள்ளவில்லை.

கலைஞரின் பேனா சிலை விவகாரத்தில் சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்கள். கலைஞர் பேனா சிலை விவகாரத்தில் யாரும் ஒற்றுக்கொள்ளவில்லை.அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார்.அதிமுகவில் இருந்த போது நன்றாக கூவினார். அவர் பல கட்சிக்கு சென்று வந்தவர் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா. திமுக குடும்பத்தை பற்றி தரை குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி.

அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல.அவர் ஒரு பச்சோந்தி. வருகின்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும்.

மிகப்பெரிய மாற்றத்தை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கொடுப்பார்.திமுக அரசு பொய்யாக பேசி ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன் கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, வீட்டு வரியை உயர்த்த மாட்டேன் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என கூறிவிட்டு அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகுட்டுவார்கள் என பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 495

    0

    0