உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை : ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் : அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 6:58 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே சைரன் சத்தம் எழுப்பியபடி ஆம்புலன்ஸ் சென்று கொண்டு இருந்தபோது ஆம்புலன்ஸ் முன்புறம் சென்று கொண்டிருந்த TN63-S-6181 என்ற பதிவெண் கொண்ட சிவப்பு நிற இன்னோவா கார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு நீண்ட நேரம் வழி விடாமல் சென்றுள்ளது.

இந்த காட்சியை ஆம்புலன்ஸ் டிரைவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் செல்லும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தும் இதை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://vimeo.com/796272038
  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?