என்னமோ நடக்கப்போகுது… சமிக்கையினால் உணர்த்திய பறவைகள் : சில வினாடிகளில் பறிபோன 4000க்கும் மேற்பட்ட உயிர்கள்..!!

Author: Babu Lakshmanan
7 February 2023, 11:04 am

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு அசம்பாவீதம் நடப்பதை முன்கூட்டியே பறவைகள் உணர்த்திய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கி – சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப்பில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.

Earthquake - Updatenews360

அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் இதுவரை 4,300க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் கடும் பேரழிவை ஏற்படுத்தியது. அங்கு வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும், மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் உணர்வதற்கு முன்பாக, பறவைகள் சமிக்கைகள் மூலம் முன்கூட்டியே எச்சரித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசம்பாவீதம் நடப்பதை உணர்ந்த பறவைகள் அங்கும், இங்குமாக கூச்சலிட்டபடி பறந்து கொண்டிருந்தது அந்த வீடியோவில் காணமுடிந்தது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!