இபிஎஸ்சை சந்திக்கிறார் ஓபிஎஸ்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2023, 1:06 pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக சத்ய பிரத சாகுவிடம் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனிசாமியும் பன்னீர் செல்வமும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.
திமுகவின் பி டீமாக இருந்தாலும் பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வத்தின் செயல்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஓபிஎஸ்சால் இரட்டை இலையை முடக்க முடியவில்லை. இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன்? அதுவே முரண்பாடு தான்.
ஓபிஎஸ் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இணைப்பு மட்டும் சாத்தியமில்லை என்றார்.
ஈபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக எதுவும் நடக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் கூறிய நிலையில் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.