விவாகரத்தான பிரபல நடிகருடன் பிரசன்னா பட நடிகை காதலா..? பொது இடத்தில் கைகோர்த்த சென்ற வீடியோ வைரல்..!
Author: Vignesh7 February 2023, 4:30 pm
இம்ரான் கான் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். கடந்த 2011ம் ஆண்டு இம்ரான் கான் அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இம்ரான் கான் ஜோடி கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதனிடையே, நடிகர் இம்ரான் கான் தற்போது பிரபல தமிழ் நடிகை லேகா வாஷிங்டன் என்பவரை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதை உறுதி செய்யும் விதத்தில் நடிகை லேகா மற்றும் நடிகர் இம்ரான் கான் பொது இடத்தில் காதல் ஜோடிகளை போல் ஒன்றாக கைகோர்த்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்தவுடன் ரசிகர்கள் இருவருக்கும் இடையே காதல் உள்ளது என்றே உறுதி செய்துவிட்டனர். நடிகை லேகா தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த கல்யாணம் சமையல் சாதம், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.