‘என்கிட்ட வந்து கேட்பியா..?’ மனு கொடுக்க வந்தவரை தாக்கும் கிராம நிர்வாக அலுவலர்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 11:40 am

சொத்து விவரம் கேட்டவரை கிராம நிர்வாக அலுவலர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மாமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் குடும்ப சொத்துக்களை பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்திருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், கோவிந்தசாமியின் சித்தப்பாவுக்கு ஆதரவாக பட்டா மாற்றி கொடுத்ததை கேட்டுள்ளார். இதற்கு சரியாக பதில் அளிக்காத கிராம நிர்வாக அலுவலர் முறைகேடாக பேசியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கிராம நிர்வாக உதவியாளர் அலுவலகத்தில் வீடியோவாக எடுத்த போது, அலுவலர் உதயகுமார் கோவிந்தராஜனை தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 519

    0

    0