முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகத்தை முறியடிக்க முந்திய இபிஎஸ் : ஈரோடு இடைதேர்தலில் பரபர!!
Author: Udayachandran RadhaKrishnan8 February 2023, 2:27 pm
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சினத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
19-ம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் திமுக அறிவித்துள்ளது.
ஆனால் பிரச்சாரத்தில் முன் கூட்டியே அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்பிரையை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் செல்லும் முன்பே எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் முகாமிட்டு திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வரும் 12ஆம் தேதி முதல் அனல் பறக்கும் வார்த்தை போர்களுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.