ரிசர்வ் டைப்னாலும் 10 வருஷமா விஜய் இப்படியா பண்ணுவாரு : அதிர வைத்த ட்விட்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 7:02 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும், உச்சத்தில் உள்ள நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளர் நடிகர் விஜய்.

நேரில் அமைதியாக இருக்கும் விஜய், கேமரா முன்னே வந்தால் நடிப்பு, நடனம் என அதகளப்படுத்துவார்.

இவர் சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இணைந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து கூறும் வகையில் இல்லாமல் முக்கியமான விஷயங்களை மட்டுமே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிடுவார்.

இந்த 10 ஆண்டுகளில் இதுவரை 391 ட்வீட்களை மட்டுமே அவர் பகிர்ந்துள்ளார். தன்னுடைய படங்கள் குறித்த விவரங்கள், பாடல், டைட்டில், ட்ரெயிலர் உள்ளிட்ட வெளியீடுகள் குறித்த தகவல்களை அவர் பெரும்பாலும் பகிர்ந்துக் கொள்வார்.

குறைந்த அளவிலான ட்வீட்களை மட்டுமே விஜய் பகிர்ந்திருந்தாலும் அவரை ட்விட்டர் பக்கத்தில் 4.3 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

இதனிடையே, அவர் யாரையும் பாலோ செய்யவில்லை. கடந்த 3ம் தேதி தன்னுடைய லியோ படத்தின் டைட்டில் ப்ரமோவை அவர் இறுதியாக பகிர்ந்திருந்தார்.

முன்னதாக கடந்த ஜனவரியில் வாரிசு படத்தின் ட்ரெயிலரை பகிர்ந்திருந்த விஜய், ஷாருக்கானின் பதான் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பயன்படுத்தி வருகிறார். இதனால் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிரும் இந்த சில விஷயங்கள் மிகுந்த வரவேற்பையும் வியூசையும் லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!