ஒரே காவல்நிலையத்தில் இருந்து 11 காவலர்கள் கூண்டோடு மாற்றம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 8:31 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை எனவும் லத்தேரி காவல் நிலைய இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒன்பது காவலர்கள் என 11 காவலர்களை கூன்டோடு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ரங்கநாதன்(si), பாஸ்கரன், காவலர்கள், வினோத், சந்திரசேகரன், தட்சிணாமூர்த்தி, தீர்த்தகிரி, சந்தோஷ், லோகேஸ்வரன், சந்திரசேகரன், ராஜசேகரன், புகழேந்தி ஆகியோர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?