காவல்துறை அலட்சியத்தால் பறிபோன விவசாயி உயிர் : காவல் நிலையம் முன்பு விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 11:58 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த, அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில், விவசாயி கொடுத்த புகாருக்கு, போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி மரணமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நிலக்கோட்டை அடுத்த,கொடைரோடு அருகே உள்ள கன்னிமா நகரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சதீஷ்கண்ணன் (23) என்பவர், பள்ளப்பட்டி சிப்காட்டில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு, இவர், கடந்த 13.4.2022 அன்று சென்றார். அப்போது பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு மற்றும் சிலர் பாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு, பேசி உன்னை பொய் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடுவோம், உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகார் மீது விசாரணை செய்ய நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், ஆத்திரமடைந்த சதீஸ்கண்ணனின் தந்தை, விவசாயி பாண்டி (50) என்பவர், கடந்த 7-ம் தேதி இரவு அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சென்று, அங்கு தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத, போலீசாரை கண்டித்து, காவல் நிலைய வாசலில் தான் மறைத்து வைத்து இருந்த விஷத்தை எடுத்து குடித்தார்.

பின்னர் விவசாயி பாண்டியை, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி பாண்டி என்பவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்தார். இந்நிலையில், விவசாயி பாண்டி விஷம் குடித்த அன்று, மேற்படி பாண்டி கொடுத்த புகாருக்கு, 3 பேர் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல், காவல் நிலைய முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற, பாண்டி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயி பாண்டி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

காவல் நிலைய முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 515

    0

    0