மறுமணம் செய்யும் முடிவில் பிரபல நடிகை… முன்னாள் கணவரால் ஏற்பட்ட விரக்தி.. திடீரென ஏற்பட்ட மனமாற்றம்!!

Author: Babu Lakshmanan
9 February 2023, 9:26 pm

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் மாறுபட்ட படங்களை கொடுப்பதில் தலைசிறந்தவர் செல்வராகவன். ஆரம்பத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனது சகோதரர் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனரானார். அதன்பிறகும், தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படம் இயக்குநர் செல்வராகவனுக்கு மட்டுமல்ல, நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால், செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதனால், செல்வராகவன் – சோனியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2006ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 4 ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர். இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

மேலும், திருமணம் செய்துகொண்ட சில வருடங்களிலேயே செல்வராகவன்- சோனியா அகர்வால் ஜோடி பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தது ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தன. விவாகரத்திற்குப் பிறகு சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சோனியா அகர்வாலை பிரிந்த செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கிறது. ஆனால், செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் தற்போது வரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, எஸ்.பி.பி.சரணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, அவரை சோனியா அகர்வால் மணக்க இருப்பதாகவும் பேசப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சோனியா அகர்வால், எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்து இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 416

    1

    0