Whatsapp பயனாளர்களே உஷார்.. இந்திய ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி… டேட்டாக்களை திருடும் வடமாநில கும்பல்!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 10:37 am

இந்திய ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி வணிகர்களை குறி வைத்து தொலைபேசி மூலமாக பொருட்களை வாங்க வைப்பது போல் லொகேஷன் லிங்கை அனுப்பி தொலைபேசியில் உள்ள டேட்டாக்களை திருடும் வட மாநில கும்பல் சதிவேலையில் ஈடுபட்டு வருகிறது.

மதுரையில் வணிகர்களே குறிவைத்து வடமாநில கும்பல் ஒன்று, மதுரையில் செயல்பட்டு வரும் பிரபல டயர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு, “இந்திய ராணுவத்திலிருந்து பேசுகிறோம், எங்களின் வாகனத்திற்கு டயர் தேவைப்படுகிறது. நாங்கள் சொல்லும் லொகேஷனில் நாளை காலை டயரை கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு,” இந்தியில் பேசியுள்ளார்.

மேலும், தொகையை சொன்னவுடன், நாளை காலை மதுரை விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனால், மறுமுனையில் பேசிய நபருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இவர்களுக்கு பல கிளைகள் இருப்பதால் அடுத்த சில நிமிடங்களிலே அவரது உரிமையாளருக்கு அதே நபர் போன் செய்து எனக்கு டயர் தேவைப்படுகிறது எனவும், நாளை காலை விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட மேலாளரும், உரிமையாளரும், இது போலியானது என உறுதி செய்தனர். உடனடியாக விமான நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு இதுபோன்ற நபர் யாரும் இருக்கிறார்களா..? என விசாரித்த போது, அப்படி யாரும் இங்கே கிடையாது என்பதும் தெரிய வந்தது.

மேலும், முன்னாள் ராணுவத்தினர்களிடமும், இதுகுறித்து நாங்கள் கேட்ட பொழுது, எந்த ஒரு பொருளையும் இந்திய ராணுவம் தனி நபர்களிடம் வாங்காது எனவும், அப்படி வாங்க வேண்டும் என்றால் டெண்டர் முறையில் பொருட்களை கொள்முதல் செய்யவும் மட்டுமே அனுமதி உள்ளது எனவும், மேலும் ராணுவத்திற்கு என சலுகைகள் பல உள்ளது எனவும், அதனால் நேரடியாக எந்த ஒரு ராணுவ அதிகாரியும் இதுபோன்று அழைப்பை கொடுக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

இவர்கள் அனுப்பும் லிங்கை ஓபன் செய்தால் வணிகர்கள் உரிமையாளர்களின் தொலைபேசியில் உள்ள வங்கி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து டேட்டாக்களும் திருடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும், எனவே வணிகர்கள் இதுபோன்று யாரேனும் அழைத்தால் அவர்கள் அனுப்பும் லிங்குகளை ஓபன் செய்யாமல், உடனடியாக அறிய உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என முன்னாள் ராணுவத்தில் ஒருவர் தெரிவித்தார்.

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் போன் நம்பரை ஏமாற்றும் வட மாநில கும்பல் வணிகர்களின் பணத்தை ஆட்டையை போட்டு விடுவார்கள் எச்சரிக்கை பதிவாக அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 498

    0

    0