‘காதலர் தினம்’ அன்று டேட்டிங் செய்யலாமா? பிரபலத்தை அழைத்த இளம் ரசிகை.. கூலாக அட்வைஸ் செய்த உச்ச நடிகர்..!
Author: Vignesh10 February 2023, 12:30 pm
பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் ‘பதான்’ திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளுக்கு பிறகும் வெளியாகி வசூலை அள்ளி குவித்து வருகிறது.
இதில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான் கானும் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில் காவி நிற பிகினியை அணிந்து தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தது பல தரப்பினர்களிடையே, எதிர்ப்புகளை கிளப்பியது. இதற்காக தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இருப்பினும் பதான் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகும் வெளியாகி வசூலை அள்ளி குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளம் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம், “நான் உங்களை திருமணம் செய்து கொள்ள கேட்டவில்லை என்றும், ஆனால் காதலர் தினம் அன்று நான் உங்களை டேட்டிங் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக்கான், “தான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்றும், நீங்கள் நல்ல பையனுடன் சேர்ந்து பதான் படத்தை பாருங்கள்” என்று அட்வைஸ் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
I am boring as a date….take some cool guy and watch #Pathaan in a theatre https://t.co/yCKPFo1QcS
— Shah Rukh Khan (@iamsrk) February 4, 2023