Climax பிடிக்காமல் நடிக்க மறுத்த சூர்யா.. கன்வின்ஸ் செய்த ஜோ.. பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம்..!
Author: Rajesh10 February 2023, 12:27 pm
2003ம் ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் காக்க காக்க. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு இப்படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.
மௌனம் பேசியதே, நந்தா போன்ற திரைப்படங்களில் சூர்யா நடித்து முடித்த சமயம், இயக்குனர் கவுதம் மேனன் மின்னலே படத்தை முடித்துவிட்டு இரண்டாவதாக போலீசை மையமாக வைத்து திரைக்கதை ஒன்றை ரெடி செய்திருந்தார். அப்போது போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யாரை தேர்ந்தெடுப்பது என குழப்பத்தில் இருந்துள்ளார். அப்போது நடிகர் சூர்யா இப்படத்தில் வரும் அன்புச்செழியன் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என சூர்யாவை சந்தித்து தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார்.
வழக்கமான காவல்துறையை பற்றிய கதையாக இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் கிளைமாக்சில் கதாநாயகி இறப்பது போன்றும் இருந்ததால் சூர்யா இந்த கதையில் நடிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் இந்த கதையை ஜோதிகாவிடம் சொல்லியுள்ளார் கௌதம் மேனன். இந்த கதையில் நடிக்க வைக்க ஜோதிகா, அஜித், விஜய் போன்றவர்களை கூறிய பின்னர், கதை தனக்கு பிடித்திருந்ததினாலும் அதே நேரத்தில் கௌதம் மேனன் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக சூர்யாவிடம் இந்த படத்திற்கு பரிந்துரை செய்துள்ளார் ஜோதிகா.
இப்படித்தான், நடிகர் சூர்யா, கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் சூர்யாவின் அன்புச்செழியன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.